விரதம் இருப்பதால் இத்தனை நன்மையா..?


விரதம் இருப்பது என்பது முழுக்க முழுக்க ஆரோக்கியம் சார்ந்த விஷயம். வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையோ விரதம் இருப்பது நம்முடைய உடலில் ஏராளமான ஆரோக்கியமான மாற்றங்களை உண்டாக்குகிறது.

· ஜீரண சக்தி அதிகரிக்கிறது.

· உடலியக்கம் சீராக்கப்படுகிறது.

· விரதம் இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

· விரதம் இருப்பதன் மூலம் மிக எளிமையாக உடல் எடையைக் குறைக்க முடியும். அதற்க்காகப் பட்டினி கிடப்பது தவறு.

· விரதம் இருப்பதால் இன்சுலின் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

· விரதம் இருப்பதால் ஆயுள் அதிகரிக்குமாம். குறைவாக சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

· விரதம் இருந்தால் மூளை சுறுசுறுப்படையும். விரதம் இருக்கும்போது உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, மூளையின் இயக்கத்தை வேகப்படுத்துகின்றன. ஆகவே மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

POST COMMENTS VIEW COMMENTS