ரூ.8 கோடி கையாடல் புகார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது


கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், தற்போதைய அமமுக நிர்வாகியுமான சின்னசாமியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அதிமுகவின் பேரவைகளுள் முக்கியப் பங்கு வகித்து வருவது அண்ணா தொழிற்சங்க பேரவை. இதன் செயலாளராக சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி பதவி வகித்து வந்தார். இவரை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த காலகட்டத்தில் ரூ.8 கோடியை சின்னசாமி கையாடல் செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கையாடல் செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரி காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்துள்ளனர். சின்னசாமி தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளராகவும், அமமுக நிர்வாகியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS