மருத்துவக்கழிவுகள் சட்டவிரோத விற்பனை?: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு


மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்த புகாரை‌ சிபிசிஐடி விசாரிக்க தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்‌யப்படுவதில்லை எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதன் விசாரணையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி சென்னையில்‌ 361 தனியார் மற்றும்‌ அரசு மருத்துவமனைகள் செயல்படுவதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக்கழிவுகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் சிபிசிஐடி‌ ஆய்வு குறித்த அறிக்கைகளை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்‌யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS