சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரவிச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை நிலவுவதால் வெப்ப நிலை அதிகரிக்கும். வழக்கமான வெப்பநிலையைவிட 2 முதல் 4 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பைவிட 60 சதவிகிதம் அதிகமாக வெப்ப நிலை இருந்தது.

கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையைப் பொருத்து வெப்பநிலை மாறுபடும். சென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS