போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்


நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில், மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறையின் முதன்மைச் செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை ஏழரை மணியளவில் தொடங்கிய இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS