டிபி நோய்க்கு புதிய சிகிச்சை முறை


காசநோய்க்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதுவரை காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. பிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதனால் வாரத்துக்கு மூன்று முறை என்று அல்லாமல், தினசரி மருந்தை உட்கொள்ளும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக டிபி நோயின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்து வருவதாக மத்திய சுகாதார ‌அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிபி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ‌தீவிரமாக தொடரும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS