சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 2.5 லட்சம் பேர் பலி!


இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

டெல்லி ஐஐடியும் அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பால் 65 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் லான்செட் ஜர்னல் என்ற இதழில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோனோர் இதயம், சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS