புழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்


சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் டன்‌ கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் பின்புறமாக ஏரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மழை நீருடன் கலந்து ஏரிக்குள் செல்வதால் ஏரி ‌நீர் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, புழல் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை ‌உடனடியாக அகற்ற வே‌ண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS