இருதய நோயை தடுக்கும் யோகா


இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கோவையில் உள்ள மருத்துவமனையின் மூலம் வழங்கப்படும் இலவச யோகா, தியானப்பயிற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதய நோயில்லா ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க, சிறந்த முயற்சியாகவும் அமைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவன கணக்கின்படி 2005ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் சுமார் 1.73 கோடி பேர் இருதய நோயால் உயிரிழந்ததை அடுத்து, கொடிய உயிரிக்கொல்லி நோயாக இருதய நோய் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருதய நோய்க்கு நவீன சிகிச்சை முறைகள் பல இருந்தும், வேலை பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக இளைஞர்களிடையே இந்நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது நூற்றில் 14 பேருக்கு உள்ள இருதய நோய், 2025இல் நூற்றில் 18 பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறு வயதிலேயே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் மருத்துவர் பெரி‌யசாமி, யோகா, தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறுகிறார். மேலும் இவர் மருத்துவமனையுடன் கூடிய யோகா மையத்தையும் நடத்தி வருகிறார்.
 

POST COMMENTS VIEW COMMENTS