எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு


எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி வைரஸ் கிருமிகளை 99 வீதம் அழிக்கக்கூடிய மருந்து ஒன்றை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வக மருத்துவ ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள 36.7 மில்லியன் மக்கள் எச்ஐவி அல்லது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி வைரஸ் உடலில் உள்ள மூன்று முக்கிய பாகங்களைத் தாக்குகிறது. இதை எதிர்த்து செயல்படக்கூடிய புதிய வகை ஆன்டிபாடினை, இந்த மருந்து கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் 24 குரங்குகளுக்கு கொடுத்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ள இந்த மருந்து அடுத்த ஆண்டு முதல் மனிதர்களை கொண்டு பரிசோதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் எய்ட்ஸ் நோயை நிரந்தமாக குணப்படுத்தும் சிகிச்சையை உருவாக்கவும் எச்ஐவி தொற்றுவதை தடுக்கும் ஊசி மருந்து ஒன்று விரைவில் தயாரிக்கப்படும் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS