தெலங்கானாவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் நோய்


தெலங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 265 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் ஒன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஆயிரத்து 742 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 265 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய மருந்துகளும், மருத்துவமனையில் தேவையான உபகரணங்களும் இருப்பதாக தெலங்கானா அரசு கூறியுள்ளது. ஒரு மாதத்தில் 265 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
 

POST COMMENTS VIEW COMMENTS