2020 முதல் BS-6 வாகன புகை உமிழ்வு விதி: மத்திய அரசு முடிவு


இந்தியாவில் வாகன புகை உமிழ்வு தொடர்பான BS-6 விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கனரக தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வாகன புகை உமிழ்வு விதி திட்டத்தில் அடுத்து BS- 5 விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆனால் இதை தவிர்த்துவிட்டு நேரடியாக BS-6 விதிமுறைகளுக்கு மாற அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு வாகன புகை உமிழ்வு விதிகளை இந்திய அரசு அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. தற்போது bs - 4 விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது

POST COMMENTS VIEW COMMENTS