ஜனவரி 17-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்


மாநிலம் முழுவதும் வரும் 17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக, அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS