ஓஆர்எஸ்: உயிர் காக்கும் மருந்தா? ஊக்க பானமா?


ஓஆர்எஸ் எனப்படும் உயிர் காக்கும் மருந்து ஊக்க பானம் என்ற பெயரில் விலை அதிகரித்து விற்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றுப்போக்கின்போது பயன்படுத்தப்படும் ஓஆர்எஸ் பவுடரை விலைக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் மருந்தாக தேசிய மருந்து விலைக் கட்டுப்பாடு ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி 21 புள்ளி 8 கிராம் எடையுள்ள ஓஆர்எஸ் பவுடரின் விலை 16 ரூபாய் 25 காசுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் FDC நிறுவனம் ஓஆர்எஸ் பவுடரை 17 ரூபாய் 17 காசுக்கு விற்பது தெரியவந்துள்ளது. ஆனால் தாங்கள் விற்கும் பவுடர் மருந்து விலை கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் அது ஊக்க பானம் என்ற பிரிவில் வருகிறது என்றும் FDC நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமும், உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் விசாரணை நடத்த உள்ளன. இந்திய ஓஆர்எஸ் மருந்து சந்தையில் FDC நிறுவனம் 57 சதவிகித பங்கை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS