நாட்டில் நான்கு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு


தமிழகத்தில் ஒருவர் உட்பட, நாடு முழுவதும் இதுவரை 4 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே, 

"குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிலருக்கு தான், ‛கில்லியன் பாரே' எனும் நரம்பு சம்பத்தப்பட்ட நோய் ஏற்படும். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும். வைரஸ் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்" என அவர் தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS