திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்


திருச்சி அரசு பொதுமருத்துமனையில் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் 103 பேரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மருத்துவமனையின் முதல்வர் அனிதா, டெங்கு அறிகுறியுடன் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வந்திருந்த டெங்கு காய்ச்சல் தற்போது எல்லா காலங்களிலும் வருவதால், குடியிருப்பைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். லேசான காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு மருந்துக் கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை மக்கள் கைவிட்டு, மருத்துவர்களை அணுகினால் டெங்குவை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தி விடலாம் எனவும் அனிதா தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS