நீண்ட நாள் வாழலாம்: இது காபி பிரியர்களுக்கு..!


 

காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

நாம் தினமும் குடிக்கும் காப்பியானது இதய நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியன வருவதற்கான சாத்தியத்தைக் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் காபி குடிப்பவர்கள் மற்றும் காபி குடிக்காதவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியது. அதில் காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பவர்களின் இறப்பு விகிதம் 12% சதவீதம் குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் ‘இண்டர்னல் மெடிசின்’ என்னும் அமெரிக்க பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு பகுதிகளைப் பூர்வீகமாக கொண்டவர்கள் மத்தியில் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர். எனவே இந்த ஆய்வு முடிவு அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஆசியர்கள் என எல்லோருக்கும் பொருந்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

காபியில் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குறைக்கும் ப்ஹினாலிக் கலவைகள் அதிகமாக இருக்கின்றன. காபியில் எந்த அளவிற்கு இந்த கலவைகள் உள்ளன என்பதை துல்லியமாக இந்த ஆராய்ச்சி கூறவில்லை என்றாலும் காபி ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் எனப் பொதுவாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 


 

POST COMMENTS VIEW COMMENTS