ஆஸ்துமாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்காமே


சிறு வயதில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ந்தபின் மாரடைப்பால் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்கள் ஆஸ்துமா பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நி‌லையில் சிறு வயதில் ஆஸ்துமா ஏற்படும் பலரும், வளர்ந்த பின், எளிதாக இதய செயலிழப்புக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று கூறி உள்ளது.  ஆஸ்துமா வளரும் பருவத்தில் ஏற்படுவதால், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களின் வளர்ச்சி, இயங்குதிறனில் பாதிப்பை நிகழ்த்துகிறது. இதன்மூலமாக, இதய தசை சுருங்கி விரிவடையும் திறனை இழக்க தொடங்குவதாகவும், முதிர் பருவத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், எளிதில் இதய செயலிழப்பு நிகழ்வதாகவும் ஆய்வு முடிவுகள்  தெரிவித்துள்ளது. இதனை சிறு வயதில் இருந்தே சரிசெய்ய அதிமதுரம், வெங்காயம், தேன் உள்ளிட்டவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அல்லது இது மூன்றையும் சேர்த்து ஜூஸ் செய்து கலந்து குடிப்பதாலும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து படிப்படியாக விடுபடலாம் எனவும் கூறுகின்றனர்.

POST COMMENTS VIEW COMMENTS