இதய நோய்களை ஏற்படுத்தும் இரைச்சல்கள்


நகர வணிக வீதிகளில் ஏற்படும் ஒலி மிகுந்த இரைச்சல்கள் இதயத் துடிப்பினைப் பாதிக்கும் என்றும், அதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பகுதியில் உள்ள டெண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், தினசரி ஒலி அளவில் ஏற்படும் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களும் இதயத் துடிப்பினைப் பாதித்து, கடுமையான பின்விளைவுகளை உடனடியாக ஏற்படுத்த வல்லது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த ஆய்வில் சுற்றுப்புறங்களில் ஏற்படும் ஒலி மாற்றங்கள் நீண்டகால அடிப்படையில் நமது உடல்நிலையைப் பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். நெரிசலான நகர வணிக வீதிகளில் ஷாப்பிங் செல்பவர்களின் உடலில் இதயத் துடிப்பை அளவிடும் சென்சார்களைப் பொறுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுப்புற ஒலி அளவு மாறுபாடுக்கு ஏற்ப இதயத் துடிப்பில் நிலையான மாற்றங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தினசரி நீடித்தால் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.  
 

POST COMMENTS VIEW COMMENTS