சொர்க்கம் என்பது நமக்கு... இன்று சுற்றுச்சூழல் தினம்!


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ஊரு தான், சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் பூமி மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. 

காட்டுத் தீ, புயல் போன்ற பல்வேறு இயற்கை காரணங்களால் மரங்கள் அழிவதோடு, மனிதர்களின் செயல்களாலும் இயற்கையின் சொத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, சுற்றுச்சூழலை மாசுப் படுத்துகிறது. இதனால் ஒசோன் படலம் பாதிப்பு அடைந்து சொர்க்க பூமி, நரகமாக மாறி வருகிறது.

சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். சுற்றுச்சூழல் மாசு மனிதர்களை மட்டுமல்லாமல் சிறுசிறு பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. கண்ட இடத்தில் குப்பையை வீசாமல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தலாம். மேலும் தண்ணீரை வீணாக்காமல், நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவதன் மூலமும் சுற்றுச்சூழலை அழகாக்கலாம். 

POST COMMENTS VIEW COMMENTS