ஊட்டச்சத்து குறைபாடு: நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் பலி


இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நாள்ஒன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை பலியாகி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாததால் 5 வயதுக்குள் பலியாகி வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இரும்புச் சத்து, விட்டமின், ஐயோடின் உள்ளிட்ட சத்துகள் போதிய அளவில் கிடைக்காததால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வரை குழந்தைகள் பலியாவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி மட்டுமின்றி உடல் குறைபாடுகளும் இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அளிக்கும்படி நாடு முழுவதும் அரசு பிரச்சாரம் செய்யும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தை பிறந்து முதல் ஆயிரம் நாள் வரை கிடைக்கும் உணவு தான் அதன் வாழ்நாள் முழுக்க கிடைக்கக்கூடிய எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் அதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரசு இவ்விவகாரத்தில் முழுமையான கவனமெடுத்தால் மட்டுமே ஊட்டச்சத்து குறைப்பாட்டால் குழந்தைகள் பலியாவதை தடுக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS