சுகாதாரத்தில் இந்தியாவை விஞ்சியது இலங்கை...ஆய்வில் தகவல்


மருத்துவம் மற்றும் சுகாதார தரத்தில் இந்தியாவுக்கு 154-ஆவது இடம் கிடைத்துள்ளது. இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கிய நிலையிலே காணப்படுகிறது.

மொத்தம் 195 நாடுகளில் உள்ள மருத்துவம் மற்றும் சுகாதார வசதி திட்டம் குறித்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சர்வதேச மருத்துவ இதழான லான்செட்டில் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவிற்கு மிக 154-ஆவது இடமே கிடைத்துள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு 73-ஆவது இடமும், பங்களாதேஷ்க்கு 52-ஆவது இடமும் கிடைத்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ மற்றும் சுகாதார வசதி திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அதேசமயம், காசநோய், சர்க்கரை நோய், இருதய நோய்கள், சிறுநீரக நோய் போன்ற நீண்டநாள் நோய்கள் ஆகிய துறைகளில் இந்தியாவின் செயல்பாடு மோசமாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா 35-வது இடத்தையே பிடித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS