ஃபேட்டா இருந்தாலும் ஃபிட்டா இருப்போங்கறது பொய்!


குண்டாக இருந்தாலும், மருத்துவ ரீதியாக நல்ல உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்பது ஒரு பொய்யான நம்பிக்கை என போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற உடல் எடை குறித்த சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் வாழும் 35 லட்சம் மக்களின் குடும்ப மருத்துவர்களுடைய ஆவணங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மிகவும் குண்டாக இருந்த நபர்கள், மெடபாலிசம் சார்ந்து ஆரோக்யமாக இருந்தாலும், அவர்களுக்கு சாதாரண எடையுடன் இருப்பவர்களை விட இதய நோய், பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்களை நெறிப்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதை இக்கருத்தரங்கில் உரையாற்றிய மருத்துவர்கள் மற்றும் ஆய்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அதிக எடையுடன் இருந்தாலும், சரியான மரபணுக்களுடன் உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்று வேறு சில ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தகைய முடிவுகளுக்கு முரணாக இந்த ஆய்வுகள் முடிவுகள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS