இன்னுமா தம் அடிக்கிறீங்க! பி கேர் புல், ஆமா


2015 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 11 சதவிகித மரணங்கள் புகைப்பிடித்ததல் காரணமாக நிகழ்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

தம் அடிப்பதால் எற்படும் உடல் தீங்குகள் பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகைபிடிப்பதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகியுள்ளது. மருத்துவ ஆய்வு இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின் படி 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த 64 லட்சம் மரணங்களில், 11 சதவிகித மரணங்களுக்கு புகைப்பிடித்தல் காரணமாக அமைந்துள்ளது. இவற்றில் 50 சதவிகித மரணங்கள் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா

ஆகிய நாடுகளில்தான் நிகழ்ந்துள்ளன.

உலகில் புகைப்பிடிப்பவர்களில் 11.2 சதவிகிதம் பேர் இந்தியர்கள். பெண்கள் அதிகளவில் புகைபிடிப்பதும் இந்த நாடுகளில் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புகைப்பிடிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS