குழந்தைகளின் உடல்பருமனுக்குக் காரணமாகும் பெற்றோர்


குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை ஏற்பட பெற்றோர்களே முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், உலகில் 35 முதல் 40 சதவீத குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனை தங்களின் பெற்றோர்கள் மூலம் மரபு ரீதியாகவே ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே சுமார் 3கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உடல் எடை குறியீட்டெண் எனப்படும் பிஎம்ஐ குறியீடு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 முதல் 40 சதவீத குழந்தைகள் மரபணு ரீதியாகவே உடல் பருமனுக்கு ஆளாவதாகக் கூறப்பட்டுள்ளது. உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் உடல்பருமனுக்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS