2ஆவது கட்ட போலியோ தடுப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது


தமிழகத்தில் நாளை 2ஆவது கட்ட போலியா தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

ஆரம்ப சுகாதார மையங்கள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என மொத்தம் 43ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என பெற்றோரை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும்‌ குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை தனியார் மருத்துவர்களும் வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS