இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியல்: திருச்சிக்கு 3 ஆவது இடம், சென்னைக்கு 36 ஆவது இடம்


இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3 ஆவது இடம் கிடைத்துள்ள அதேவேளையில் தமிழகத் தலைநகர் சென்னைக்கு 36 ஆவது இடம் கிடைத்துள்ளது.

நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள 73 முக்கிய நகரங்களில் ”ஸ்வாஷ் பாரத் மிஷன்” திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நகரங்களில் உள்ள சுகாதார வசதிகள்,திட கழிவு மேலாண்மை மற்றும் கழிப்பறை வசதி போன்ற முக்கிய அம்சங்கள் அடிப்படையில், இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் மைசூர் நகருக்கு முதலாவது இடமும்,சண்டிகருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளன.

இந்தியாவை தூய்மையாக்குவதே கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ””ஸ்வாஷ் பாரத் மிஷன்” திட்டத்தின் நோக்கமாகும்

POST COMMENTS VIEW COMMENTS