ஊடகங்கள் மூலமாக சிகரெட்டின் கெடுதல்கள் பற்றி விளம்பரப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை


சிகரெட் பெட்டி மீது பெரிய எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் விவகாரத்தில் மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீதான எச்சரிக்கைப் படங்களைப் பெரிதாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், திரையரங்குகள், ‌இணையதளங்கள் ஆகியவற்றில் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

புகையிலைப் பொருள் உறைகள் மீது ‌85 சதவிகிதம் அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை இனியும் தாமதப்படுத்தாமல் வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

POST COMMENTS VIEW COMMENTS