உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்..!


குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் நோய்த்தோற்று ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எளிதான சில இயற்கை உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.* தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களான ‘ப்ரோபயாட்டிக்’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.எனவே பால் மற்றும் தயிரை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

* நோய்தொற்றுக்கு காரணமான நுண்ணுயிர்களை முட்டைகோஸ் அகற்றும் என்பதால், அதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* கிரீன் டீ மற்றும் ப்ளாக் டீ இரண்டுமே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இவற்றை ஒரு நாளுக்கு ஓரிரு தடவைக்கு மேல் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

* எலுமிச்சை சாறு அமிலத்தன்மை கொண்டது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சக்தி அதிகமாகும்.

* நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கும் உணவுகளில் சிறந்த உணவு பூண்டு. இது ஓர் சிறந்த ஆன்டி-பாக்டீரியல் உணவாகவும் விளங்குகிறது. வெறும் பூண்டை தினம் ஒன்று வாயில் மென்று சாப்பிட்டு வந்தால் உடல் விரைவில் பலம் பெரும்.

* பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ போன்றவை நோந் எதிர்ப்பு சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தினம் ஒரு காரட் சாப்பிட வேண்டும். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

* வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கிறது. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடைசெய்கிறது.

POST COMMENTS VIEW COMMENTS