உஷாரய்யா..உஷாரு..! தென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு


தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் வடகிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு உரிய நேரத்தில் தொடங்காமல் கால தாமதமாக அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து பனி பெய்து குளிர ஆரம்பித்தது. இதன் காரணமாகவும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சாத்தான்குளத்தில் 5 செ.மீ. மழையும், மயிலாடி மற்றும் கன்னியாகுமரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS