கிரீன் டீ அதிகம் பருகினால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?!


மக்களிடம் கிரீன் டீ பருகும் வழக்கம் அதிகமாக பரவி வருகிறது. கேட்டால் இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள். ஆம், கிரீன் டீ நல்லது தான். ஆனால், அளவுக்கு மீறி அடிக்கடி கிரீன் டீ குடித்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் தான் முதன்முதலில் கிரீன் டீ அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் இன்று பெரிதும் விரும்பப்படுகிறது. கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.

ஆனால் கிரீன் டீயை காலையில் எழுந்தவுடனும் உணவுக்குப் பின் தொடர்ச்சியாகவும் பருகக் கூடாது. உணவுக்குப் பிறகு உடனடியாக பருகினால் அது நம் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நம் உடலில் சேர விடாது. எனவே 30 முதல் 45 நிமிடம் கழித்துப் பருகினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும், நரம்பு சம்பந்தமான நோய்களை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமலும் பாதுகாக்கும். கிரீன் டீயை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பருக வேண்டும். அதிகமாக பருகினால் கல்லீரலை பாதிக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

காலையில் எழுந்தவுடன் கிரீன் டீயை பருகுவது உடலை பாதிக்கும் அதற்கு பதிலாக கொஞ்சம் தண்ணிர் குடித்து விட்டு பருகுவது உடலுக்கு நல்லது.

அதேபோல, இரவு தூங்க செல்வதற்கு முன் பருகக்கூடாது, அவ்வாறு பருகினால் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

POST COMMENTS VIEW COMMENTS