யாரும் என் காலில் விழ வேண்டாம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி


புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை சுகாதார இயக்கத்தில் 130 புதிய ஊழியர்களுக்கும், பள்ளி கல்வித்துறையில் 41 உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அப்போது சிலர் அவரது காலில் விழுந்து ஆசி பெற முயன்ற போது யாரும் எனது காலில் விழக்கூடாது என்று நாராயணசாமி கண்டிப்புடன் தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு ஊழியரும் பழக்கூடை, சால்வை, இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். அவற்றையும் வாங்க மறுத்துவிட்டார். இதுபோன்ற கலாச்சாரங்கள் எதுவும் தேவையில்லை என்று அவர்களிடம் நாராயணசாமி கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS