நாட்டின் 67வது குடியரசுத் தின விழா இன்று கோலாகமாக கொண்டாப்படுகிறது


நாட்டின் 67ஆவது குடியரசுத் தின விழா இன்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூவர்ண கொடியை ஏற்றுகிறார். அப்போது, முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹாலந்த் பங்கேற்கிறார். குடியரசுத் தின விழாவில் பிரான்ஸ் நாட்டு படையின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக டெல்லி முழுவதும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

20 மீட்டருக்கு ஒரு காவலர் என்ற வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசுத் தின விழாவில் ஆளுநர் ரோசைய்யா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் ஆளுநர் ஏற்றுக்கொள்கிறார். அப்போது, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS