ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் ! காவல்துறையினர் தடியடி


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கிராம மக்கள் ஏராளமானோர் பேரணி சென்றனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்கள்ளுக்கும் காவல்துறைக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. மோதலில் காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இப்போது தூத்துக்குடியில் இந்த மோதல் சம்பவத்தால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS