தமிழக முதல்வரை சந்திப்பாரா பிரதமர் மோடி ?


கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக வரும் மே மாதம் 2-ம் தேதி தமிழக முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்கிறார். அதோடு தன்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் மோடியிடமும் கேட்டுள்ளார். 

காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென பலத்த கோரிக்கை எழுந்து வருகிறது. உச்சநீதிமன்றமும் ஏதேனும் ஒரு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 150 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. விழா தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி , உறுப்பினர் என்ற முறையில் அக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  

அதோடு இந்த பயணத்தை வீணடித்து விடாமல் காவிரி தொடர்பாக அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தன்னை சந்திக்க வேண்டும் என கேட்டு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை 

POST COMMENTS VIEW COMMENTS