தமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு


இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை பொங்கலுக்குள் விடுவிக்காவிட்டால், குடியரசு தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

நாகையில், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சை, கன்னியாகுமரி, நாகை மாவட்ட மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டது.

சிறையிலிருக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை பொங்கல் பண்டிகைக்குள் விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு ஏற்கெனவே கெடுவிதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு விடுவிக்காவிட்டால், அடுத்தடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து, வரும் 26-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்தின்போது முடிவெடுக்கப்படும் என மீனவர்கள் அறிவித்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS