ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு பேரவை நன்றி


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தந்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் அந்தப் பேரவை நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க சட்டப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுத்ததற்காகவும், பிரதமருக்கு கடிதம் எழுதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததற்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS