கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 2,850 வழங்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா


கரும்புக்கான ஆதாய விலையாக 2,850 ரூபாயை நிர்ணயித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர், கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 2015 - 2016-ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கரும்பு விவசாயிகளுக்கு நடப்புப் பருவத்தில் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய் கிடைக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS