சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி


தமிழக சட்டப்பேரவைத் ‌தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கு, சென்னையில் முதல்கட்ட பயிற்சி முகாம் தொடங்க‌ப்பட்டுள்ளது.

இம்முகாமில் மாநில அளவிலான தேர்த‌ல் அலுவலர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாம், வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தேர்தல் அலுவலர்கள் 94 பேர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் அலுவலர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS