தமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், அவை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை காக்க, புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS