மதுரை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு


மதுரை விமான நிலைத்திற்கு வந்திறங்கிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை மத்திய அரசு நேற்று வழங்கியதை அடுத்து, அதனைப் பெற்றுத் தந்தமைக்கு நன்றி கூறும் விதமாக, ஜல்லிக்கட்டுப் பிரியர்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் இந்த வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்த ஒரு காளை மண்டியிட்டு பொன் ராதாகிருஷ்ணனை வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது.

POST COMMENTS VIEW COMMENTS