மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற ஜெயலலிதா கோரிக்கை


மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர், தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பு நடவடிக்கைகள் பல மேற்கொண்டாலும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS