பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்


பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய ஊர்களுக்குச் செல்ல வரும் 14-ம் தேதி வரை 4,682 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல, மாநிலத்தின் மற்ற முக்கியப் பகுதிகளில் 7,942 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர் மக்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக இதே எண்ணிக்கையிலான சிறப்புப் பேருந்துகளை வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இயக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.

POST COMMENTS VIEW COMMENTS