மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க கருணாநிதி வலியுறுத்தல்


தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி பதில் வடிவத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக நிவாரண நிதி பாகுபாடின்றி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2 லட்சம் பேரை நிவாரணப் பட்டியலில் இருந்து நீக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 30.42 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதாக தெரிவிக்கும் அரசு, அவசர அவசரமாக 14 லட்சம் பேருக்கு மட்டும் உடனடியாக நிவாரணம் வழங்கியதன் காரணம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்துவிட்டத்தில் செய்த தவறை நிவாரணம் வழங்குவதில் செய்வதாகவே பாதிக்கப்பட்டோர் எண்ணுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS