காஷ்மீரின் முதலாவது பெண் முதல்வராகிறார் மெகபூபா முப்தி : விரைவில் பதவியேற்பு


காஷ்மீரின் முதலாவது பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சராக இருந்த முஃப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகள் மெகபூபா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முஃப்தி முகமது சயீதிற்காக அனுசரிக்கப்படும் நான்கு நாள் துக்கத்திற்கு பிறகு பதவியேற்க மெகபூபா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS