5.29 கோடி வருமானவரி கணக்கு தாக்கல்


நடப்பு நிதியாண்டில் ஐந்து கோடியே 29 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று மாலை ஏழு மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் மட்டும் 22 லட்சம் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இணையதளம் மூலம் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் மொத்தம் ஐந்து கோடியே 29 லட்சத்து 66 ஆயிரத்து 509 வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

Read Also -> விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்ற அம்மாவைத் தேடுகிறது போலீஸ்! 

POST COMMENTS VIEW COMMENTS