நாளை முதல் கார், பைக் விலை உயர்கிறது - எதனால் தெரியுமா?


உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மோட்டார் வாகனங்களுக்கு நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு வழங்க அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது. மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டத்தின்படி கார்களுக்கு 3 ஆண்டுகள், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தற்போது மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடு ஓராண்டு வரை மட்டுமே இருக்கிறது. சில காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே ஓராண்டிற்கு மேலான காப்பீட்டை வழங்கி வருகின்றன. அதனால், கார்களுக்கு 3 ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் என்பதை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. அதற்கான கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 75 சிசிக்கும் குறைவான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ5,286ம் வசூலிக்க வேண்டும்.

கார் - மூன்றாண்டு மூன்றாவது நபர் இன்சூரன்ஸ்

ரூ5,286  - 1000 சிசி வரை
ரூ9,534  - 1000-1500 சிசி
ரூ24,305 - 1500 சிசிக்கு மேல்

இருசக்கர வாகனம் - 5 ஆண்டு மூன்றாவது நபர் இன்சூரஸ்

75 சிசிக்குள்      - ரூ1,045
75-150 சிசி        - ரூ3,285
150-350 சிசி       -  ரூ5,453
350 சிசிக்கு மேல் -  ரூ13,034

Read Also -> மிதாப்பை தமிழுக்கு அழைத்து வந்தது எப்படி?

                  

Read Also -> 23 வருடங்களாக சைக்கிளில் சென்று இலவசமாக பாடம் நடத்தும் அதிசய ஆசிரியர்

சாலை விபத்துக்குளில் பாதிக்கப்படுபவர்கள், பாதிப்பை ஏற்படுத்திய வாகன உரிமையாளரின் பின்னால் செல்லாமல், தானாக காப்பீடுத் தொகை பெறும் நோக்கில் இந்த இன்சூரன்ஸ் தொகை வசூலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. கூடுதலாக இந்த இன்சூரன்ஸ் தொகை வசூலிக்கப்படுவதால் கார், இருசக்கர வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS