ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 95 காசுகளாக இருந்தது. பின்னர் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து 71 ரூபாயாக வர்த்தகமானது. 

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 74 காசுகளாக இருந்த நிலையில் இன்று அது மேலும் சரிந்து 71 ரூபாயாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாயை எட்டுவது இதுவே முதல்முறை. மாத இறுதி என்பதால் டாலருக்கான தேவை அதிகரித்ததே ரூபாய் மதிப்பு சரிய காரணம் என சொல்லப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவு அதிகரிக்கும்.

POST COMMENTS VIEW COMMENTS