சென்னை சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், சென்னை பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெங்களூருவில் இருந்து சென்னை வந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள், சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள  சாஃப்ட்வேர் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS