கடனாளர்களை 'கவனிக்க' துப்பறிவாளர்கள்: வங்கிகள் அதிரடி


கடனை திரும்பச் செலுத்தாத கடனாளர்களை ரகசியமாக கண்காணிக்க துப்பறிவாளர்களை வங்கிகள் நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.

கடன் பெற்று திரும்பச் செலுத்தத் தவறுகின்றவர்களால் ஏற்படும் வாராக்கடன்களை கட்டுப்படுத்த வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடன் பெற்றவர் ஓரிரு மாதத் தவணையை செலுத்தத் தவறும் போதிலிருந்து அவரைக் கண்காணிக்க துப்பறிவாளர்களை பணியமர்த்த வங்கிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பு கொள்ள இயலாத வாடிக்கையாளர்கள் குறித்து துப்பறிந்து வங்கிக்குச் தெரிவிப்பது இவர்களின் பணியாக இருக்கும். 

வங்கியுடன் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளரிடமும் வாராக்கடனை வசூலிப்பதற்கான வழிகளை துப்பறிவாளர் ஆராய்வார் எனக் கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் வருவாய், இதர வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் வர்த்தக நடவடிக்கை ஆகியவை பற்றி துப்பறிவாளர் கண்டறிந்து வங்கிக்குத் தெரிவிப்பார் என்றும், அதன்மூலம், வாடிக்கையாளரிடம் வாராக்கடனை வசூலிக்க வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS